ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

1. இந்தப்புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – -ஆனந்தமே

2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்யக் கோட்டையே
காரணமின்றிக் கலங்கேனே யான்
விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே- ஆனந்தமே

3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம், ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்- -ஆனந்தமே

4. கூடார வாசிகள் ஆகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையல்லாத வீடொன்றை மேலே தான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ? – -ஆனந்தமே

5. துன்பங்கள் தொல்லைகள் இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினுடே அனுப்பிடுவார் – -ஆனந்தமே

6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குறேன்
என் நேசர் தன் முக ஜோதியே யல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை – -ஆனந்தமே



aananthdhame paramananthdhame

aananthdhame paramananthdhame – iyesu
annalai andinork kananthdhame

1. inthdhappuvi oru sonthdham alla enru
iyesu en nesar mozhinthdhanare
ikkattu thunpamum iyesuvin thontarkku
ingkeye pangkayk kidaiththidinum – -aananthdhame

2. karththave neer enthdhan karunyak koddaiye
karanaminrik kalangkene yan
visuvacha bezhaiyil melokam vanththita
meviye sukkan bidiththidume- aananthdhame

3. ennullame unnil sanjalam, een veenay?
kaneerin pallaththakkallo ithu
seeayon nakaraththil seekkiram senru nam
jayakeedham badi makizhnththitalam- -aananthdhame

4. kudara vasikal aakum namakkingku
veedendrum nadendrum sollalam?
kaivelaiyalladha veedoenrai mele than
seyven enas sollib bokalaiyo? – -aananthdhame

5. thunpangkal thollaikal idukkan itar ivai
thondar emai andi vanththidinum
solli mudiyadha aarudhal kirubaiyai
thunpaththinude anubbiduvar – -aananthdhame

6. iyesuve seekkiram ithdharai varumen
eezhai vekuvayk kalangkuren
en nesar dhan muka jothiye yallamal
inpam dharum porul eethumillai – -aananthdhame